IND Vs NZ Champions Trophy 2025: குரூப் 'ஏ'-வில் முதலிடம் யாருக்கு? இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்.. எப்போது? எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிக்கட்டம் விரைவில் நெருங்கவுள்ள நிலையில், நாளை குரூப் ஏ பிரிவில், அரையிறுதிக்கு தகுதியான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், முதல் இடத்தை தக்கவைக்கும் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

IND Vs NZ Champions Trophy 2025: குரூப் 'ஏ'-வில் முதலிடம் யாருக்கு? இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்.. எப்போது? எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Rohit Sharma | Mitchell Santner (Photo Credit: @ICC X)

மார்ச் 01, துபாய் (Sports News): பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், 10 ஆட்டங்கள் நடைபெற்றுவிட்டன. குரூப் 'ஏ' பிரிவில் நியூசிலாந்து, இந்தியா அணிகள், குரூப் 'பி' பிரிவில் தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன அரையிறுதிக்கு முன்னதாக குரூப் ஏ பிரிவில் இருக்கும் நியூசிலாந்து - இந்தியா கிரிக்கெட் அணிகள் (IND Vs NZ Cricket), தங்களின் போட்டி அட்டவணைப்படி மோதிக்கொள்ளும் ஆட்டம், நாளை (02 மார்ச் 2025), இந்திய நேரப்படி நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் (India Vs New Zealand Cricket) மோதல்:

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி பாகிஸ்தான் சார்பில் தலைமையேற்று நடத்தப்பட்டாலும், இந்தியா தனது வீரர்களை பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு கருதி அனுப்ப மறுத்துவிட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இருக்கும் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா மோதிய விளையாட்டில், இறுதியில் இந்தியா வெற்றி அடைந்தது. இதனால் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நாளைய ஆட்டத்தில் வெற்றி அடையும் அணியே, நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்க வைக்கும் என்பதால், இரண்டு அணிகளும் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. India Vs South Africa Masters: இந்தியா மாஸ்டர்ஸ் Vs தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் போட்டி இன்று.. எங்கு நடக்கிறது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.! 

நேரலை பார்ப்பது எப்படி (Where to Watch IND Vs NZ Live)?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னான போட்டி என்பதால், ஆட்டமும் விறுவிறுப்பு பெற்றுள்ளது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs New Zealand National Cricket Team Timeline) மோதும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையை காணலாம். தமிழ் மொழியில் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்திலும் நேரலையை காணலாம்.

இந்தியா & நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer), சப்மன் கில் (Shubman Gill), விராட் கோலி (Virat kohli), அக்சர் படேல் (Axar Patel), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வாஷிங்க்டன் சுந்தர் (Washington Sundar), கேஎல் ராகுல் (KL Rahul), ரிஷப் பண்ட் (Rishabh Pant), அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ஹர்ஷித் ராணா (Harshit Rana), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), முகமது ஷமி (Mohammad Shami), வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா (Rohit Sharma) அணியை வழிநடத்துகிறார். மிட்செல் சான்டநெர் (Mitchell Santner) தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் (New Zealand Team Squad for ICC Champions Trophy 2025), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி:

(The above story first appeared on LatestLY on Mar 01, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).