
மார்ச் 09, துபாய் (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் (ICC Champions Trophy 2025 Final), இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதும் ஆட்டம் நடந்தது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து 251 ரன்கள் எடுத்தது. இதனால் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கி இருக்கிறது.
இரண்டு முக்கிய விக்கெட் வீழ்ந்தது:
இந்நிலையில், இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் எஸ். ஹில் 50 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். மிட்செல் சான்டனர் பந்தில், கிளன் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். கிளன் பிலிப்ஸ் வழக்கம்போல தனது தாவும் கேட்ச் திறனை வெளிப்படுத்தி விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல, விராட் கோலி 2 பந்துகளில் 1 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். மைக்கேல் பிரேஸ்வெல்லின் பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆகி வெளியேறினார். 18.4 & 19.1 ஓவர்களில் ஹில், விராட் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
ஹில் அதிரடியாக ஆடிய காட்சிகள்:
Shubman Gill breaks the shackles! 🔥
An incredible start by the Indian openers in this run-chase 🤝#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
📺📱 Star watching FREE on JioHotstar:… pic.twitter.com/Ihk2eFPwx6
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025