MS Dhoni Watching Live IND Vs PAK: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் பார்க்கும் எம்எஸ் தோனி & சன்னி டியோல்.!
இந்தியா - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டித்தொடரை, கிரிக்கெட்டர் எம்.எஸ் தோனி சி.எஸ்.கே அணியின் உடையில் நேரலையை கண்டு ரசித்தார். அவருடன் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி டியோலும் இணைந்துகொண்டார். கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
பிப்ரவரி 23, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து, மதியம் 02:30 மணிமுதல் தொடங்கி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்து, 27 ஓவரில் 2 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. Virat Kohli & Babar Azam: அப்படி என்ன பேசிருப்பாங்க? ஒரேயொரு புன்னகையால் வைரலான விராட் & பாபர் அசாம் கிளிக்ஸ்.!
தோனி - டியோல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்த தருணம்:
இன்றைய ஆட்டத்தை பலரும் நேரடியாக மைதானத்திற்கு சென்று, நேரில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில், வீட்டில் இருந்தபடி ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும் நேரலையில் காணலாம். தமிழ் மொழியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (Star Sports Tamil 1) பக்கத்தில், நமது தாய் மொழியிலும் காணலாம். இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், உலகளாவிய பலகோடி கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த எம்.எஸ் தோனி (MS Dhoni), சிஎஸ்கே அணியின் டி-சர்ட் அணிந்தபடி இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நேரலையை கண்டு வருகிறார். அவருடன் பாலிவுட் நடிகர் சன்னி டியோலும் நேரலையை பார்த்து வருகிறார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Hardik Pandya & Axar Patel: ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் அசத்தல்.. பாபர், இமாம் விக்கெட் வீழ்த்தி அசத்தல்.!
எம்எஸ் தோனி மற்றும் நடிகர் சன்னி டியோல் இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் ஆட்டத்தை நேரலையில் கண்ட காட்சி:
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வந்த சன்னி டியோல்:
ஆர்வத்துடன் ரசிகராக கிரிக்கெட் பார்க்கும் தல தோனி (Thala Dhoni Watching India Vs Pakistan Match):