Hardik Pandya & Babar Azam (Photo Credit: @SportsTodayofc / @Khalid_bd_ X)

பிப்ரவரி 23, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டி, பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து, மதியம் 02:30 மணிமுதல் தொடங்கி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி பௌலிங் செய்து வருகிறது. 10 ஓவரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 52 ரன்கள் சேகரித்துள்ளது. ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. Mohammad Shami: முதல் ஓவரிலேயே இந்திய ரசிகர்களுக்கு ஷாக்.. அதிர்ச்சி கொடுத்த ஷமி.. 11 பந்துகள் வீசி மோசமான சாதனை.! 

10 ஓவருக்குள் இரண்டு முக்கிய விக்கெட் பறிபோனது:

இந்நிலையில், பாபர் அசாம் (Babar Azam) 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியாவின் (Hardik Pandya) பந்துவீச்சில், கேஎல் ராகுல் பாபர் எதிர்கொண்ட பந்தை கேட்ச் பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் பாபர் அசாம் 8.2 வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, 9.2 வது ஓவரில் இமாம் உல் ஹஹ் (Imam-ul-Haq) 26 பந்துகளில் 10 ரன்கள் சேகரித்த நிலையில், அக்சர் படேல் (Axar Patel) விரைந்து செயல்பட்டு அவரை ரன் அவுட் ஆக்கினார். இதனால் 10 ஓவருக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 விக்கெட் இழந்தது. IND Vs PAK Toss Update: இந்தியா Vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று பாக்., அணி பேட்டிங் தேர்வு..! 

பாபர் அசாம் விக்கெட் எடுத்த ஹர்திக் பாண்டியா:

தனது ஸ்டைலில் ஹர்திக் பாண்டியா:

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா:

அக்சர் படேலின் அசத்தல் செயலால் உல் ஹஹ் ரன் அவுட்:

அக்சர் படேலின் தரம் (Accuracy of Axar Patel):

ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்திய காணொளி: