
பிப்ரவரி 23, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டி, பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து, மதியம் 02:30 மணிமுதல் தொடங்கி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி பௌலிங் செய்து வருகிறது. 14 ஓவரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 61 ரன்கள் சேகரித்துள்ளது. 2 விக்கெட் இழக்கப்பட்டுள்ளது. ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. Hardik Pandya & Axar Patel: ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் அசத்தல்.. பாபர், இமாம் விக்கெட் வீழ்த்தி அசத்தல்.!
பாபர் அசாம் மற்றும் விராட் கோலி பேசிய நிகழ்வு:
இந்நிலையில், ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் ஆகியோர், ஓவரின் நடுவே பேசி சிரித்துக்கொண்டனர். பின் இருவரும் பரஸ்பரம் மரியாதை வெளிப்படுத்தி, அங்கிருந்து அணிக்காக விளையாட நகர்ந்து சென்றனர். சில நொடிகள் மட்டுமே நடந்த இந்த நிகழ்வு, ரசிகர்களின் கண்களில் பட்டு தற்போது வைரலாகி வருகிறது. பாபர் அசாம் மற்றும் விராட் கோலி அப்படி என்னதான் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. Mohammad Shami: முதல் ஓவரிலேயே இந்திய ரசிகர்களுக்கு ஷாக்.. அதிர்ச்சி கொடுத்த ஷமி.. 11 பந்துகள் வீசி மோசமான சாதனை.!
பாபர் அசாம் மற்றும் விராட் கோலி பேசிக்கொண்ட புகைப்படம்:
Babar Azam and Virat Kohli. pic.twitter.com/ZWY48uuKvk
— 𝙎𝙝𝙚𝙧𝙞 (@CallMeSheri1) February 23, 2025
இன்றைய நாளின் சிறந்த புகைப்படம் என வருணிக்கும் நெட்டிசன்கள்:
Virat Kohli 🤝 Babar Azam
📸: JioHotstar pic.twitter.com/FTm3wZeAtl
— CricTracker (@Cricketracker) February 23, 2025
அப்படி என்ன பேசிருப்பாங்க? என சிந்திக்கும் ரசிகர்கள்:
Guess the conversation between Babar Azam and Virat Kohli 👀 pic.twitter.com/cNZtPVfpxF
— CricWick (@CricWick) February 23, 2025