AUSW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. வங்கதேச மகளிர் அணி தடுமாற்றம்..!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதும் 17வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 198 ரன்கள் அடித்துள்ளது.
அக்டோபர் 16, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 16) ஆஸ்திரேலியா மகளிர் அணி - வங்கதேச மகளிர் அணிகள் மோதும் 17வது லீக் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. INDW Vs ENGW: இந்தியா Vs இங்கிலாந்து.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
ஆஸ்திரேலியா மகளிர் எதிர் வங்கதேசம் மகளிர் (Australia Women Vs Bangladesh Women):
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா மகளிர் அணி, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சோபானா மோஸ்டரி 66* ரன்கள், ரூப்யா ஹைதர் 44 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா மகளிர் அணி சார்பில் ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா மகளிர் அணி:
அலிசா ஹீலி (கேப்டன்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், மேகன் ஸ்கட், டார்சி பிரவுன்.
வங்கதேச மகளிர் அணி:
ஃபர்கானா ஹோக், ரூப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா (கேப்டன்), சோபானா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்டர், ஃபஹிமா காதுன், ரபேயா கான், நிஷிதா அக்டர் நிஷி, ஃபரிஹா த்ரிஸ்னா.
(The above story first appeared on LatestLY on Oct 16, 2025 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

