RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; 69 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. இங்கிலாந்து மகளிர் அபார பந்துவீச்சு..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 4வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; 69 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. இங்கிலாந்து மகளிர் அபார பந்துவீச்சு..!
RSAW Vs ENGW Batting First (Photo Credit: @RanaAhmad056 X)

அக்டோபர் 03, கவுகாத்தி (Sports News): ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின், இறுதிப்போட்டி நவம்பர் 02ஆம் தேதி நடைபெறும். நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில், பாகிஸ்தான் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 03) தென்னாப்பிரிக்கா மகளிர் அணி - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 4வது லீக் போட்டி, கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. RSAW Vs ENGW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; 4வது லீக் போட்டியில்.. இங்கிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் இங்கிலாந்து மகளிர் அணி (England Women Vs South Africa Women):

லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 46 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 10 போட்டிகளிலும், இங்கிலாந்து மகளிர் அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டிக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அபார பந்துவீச்சு:

அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சினாலோ ஜஃப்டா 22 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து மகளிர் அணி சார்பில் லின்சி ஸ்மித் 3, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன் தலா 2 விக்கெட்கள், லாரன் பெல் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சினாலோ ஜஃப்டா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மசபாடா கிளாஸ், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா.

இங்கிலாந்து மகளிர் அணி:

டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்ஸி, சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்.

(The above story first appeared on LatestLY on Oct 03, 2025 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).