RSAW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணிகள் மோதிய 14வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

RSAW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி..!
South Africa Women Vs Bangladesh Women (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 13, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இன்று (அக்டோபர் 13) தென்னாப்பிரிக்கா மகளிர் அணி - வங்கதேச மகளிர் அணிகள் மோதிய 14வது லீக் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொண்டது. RSAW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; வங்கதேசத்திற்கு எதிரான 14வது லீக்.. தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 233 ரன்கள் இலக்கு..!

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணி (South Africa Women Vs Bangladesh Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 232 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஷோர்னா அக்டர் 51* ரன்கள், ஷர்மின் அக்தர் 50 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கா மகளிர் அணி சார்பில் நோன்குலுலேகோ மலாபா 2, சோலி ட்ரையோன் மற்றும் நாடின் டி க்ளெர்க் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 49.3 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சோலி ட்ரையோன் 62 ரன்கள், மரிசான் கேப் 56 ரன்கள், இறுதியில் நாடின் டி க்ளெர்க் (37* ரன்கள்) அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம், பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், அன்னேரி டெர்க்சன், மரிசான் கேப், சினாலோ ஜாஃப்டா, சோலி ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மசபட்டா கிளாஸ், துமி செகுகுனே, நோன்குலுலேகோ மலாபா.

வங்கதேச மகளிர் அணி:

ருப்யா ஹைதர், ஃபர்கானா ஹோக், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா (கேப்டன்), சோபானா மோஸ்டரி, ஷோர்னா அக்டர், ஃபஹிமா காதுன், நஹிதா அக்டர், ரபேயா கான், ரிது மோனி, மருஃபா அக்டர்.

(The above story first appeared on LatestLY on Oct 13, 2025 10:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).