SLW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்.. இலங்கை அணி 258 ரன்கள் குவிப்பு..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 258 ரன்கள் அடித்துள்ளது.

SLW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்.. இலங்கை அணி 258 ரன்கள் குவிப்பு..!
SLW Vs NZW (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 14, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இன்று (அக்டோபர் 14) இலங்கை மகளிர் அணி - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறுகிறது. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. PAK Vs SA 1st Test, Day 3: பாகிஸ்தான் 167 ரன்களுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 277 ரன்கள் இலக்கு..!

இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணி (Sri Lanka Women Vs New Zealand Women):

சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி, சோஃபி டெவின் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 258 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா அதிரடியாக விளையாடி 55* ரன்கள், கேப்டன் சாமரி அத்தபத்து 53 ரன்கள், ஹாசினி பெரேரா 44 ரன்கள், விஷ்மி குணரத்ன 42 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் கேப்டன் சோஃபி டெவின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கை மகளிர் அணி:

ஹாசினி பெரேரா, சாமரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, பியூமி வத்சலா படல்கே, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.

நியூசிலாந்து மகளிர் அணி:

சூசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ப்ரீ இல்லிங், ஈடன் கார்சன்.

(The above story first appeared on LatestLY on Oct 14, 2025 06:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).