Sri Lanka Women Vs South Africa Women: தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய 18வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

Sri Lanka Women Vs South Africa Women (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 17, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 17) இலங்கை மகளிர் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய 18வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்றது. SLW Vs RSAW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; மழையால் ஆட்டம் பாதிப்பு.. இலங்கை அணி 105 ரன்கள்..!

இலங்கை மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் (Sri Lanka Women Vs South Africa Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சுமார் 4 மணிநேரமாக பெய்த கனமழையால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன 34 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா மகளிர் அணி சார்பில் நோன்குலுலேகோ மலாபா 3 விக்கெட்களை வீழ்த்தினார். டிஎல்எஸ் முறைப்படி, 20 ஓவர்களில் இலக்கு 121 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் லாரா வோல்வார்ட் 60* ரன்கள், டாஸ்மின் பிரிட்ஸ் 55* ரன்கள் அடித்தனர். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அசத்தியது.

இலங்கை மகளிர் அணி:

விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, பியூமி வத்சலா படல்கே, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னேரி டெர்க்சன், மரிசான் கேப், கராபோ மெசோ, க்ளோ ட்ரையன், நாடின் டி க்ளெர்க், நோண்டுமிசோ ஷாங்காஸ், மசபாடா கிளாஸ், நோன்குலுலேகோ மலாபா.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement