SLW Vs RSAW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டி.. இலங்கை மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 18வது லீக் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அக்டோபர் 17, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 17) இலங்கை மகளிர் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 18வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறுகிறது. Australia Women Vs Bangladesh Women: கேப்டன் அலிசா ஹீலி அதிரடி சதம்.. ஆஸ்திரேலியா மகளிர் அணி இமாலய வெற்றி..!
இலங்கை மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் (Sri Lanka Women Vs South Africa Women):
சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 3வது இடத்திலும், இலங்கை மகளிர் அணி 7வது இடத்திலும் உள்ளன. நடப்பு தொடரில், இலங்கை அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இலங்கை மகளிர் அணி:
விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, பியூமி வத்சலா படல்கே, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.
தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:
லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னேரி டெர்க்சன், மரிசான் கேப், கராபோ மெசோ, க்ளோ ட்ரையன், நாடின் டி க்ளெர்க், நோண்டுமிசோ ஷாங்காஸ், மசபாடா கிளாஸ், நோன்குலுலேகோ மலாபா.
(The above story first appeared on LatestLY on Oct 17, 2025 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

