நவம்பர் 22, பிரேசில் (Sports News): 32 அணிகள் மோதிக்கொள்ளும் பீபா உலகக்கோப்பை தொடரில், நேற்று பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் தங்களின் தகுதிச்சுற்றில் மோதிக்கொண்டன. பிரேசில் நாட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இறுதியில் அர்ஜென்டினா அணி பிரேசிலில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின்போது, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றது. இதனால் அரைமணிநேரம் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
இருதரப்பு சண்டையை விலக்க காவலர்கள் அரங்கத்திற்குள் களமிறங்கிய நிலையில், அதிகாரிகள் நடத்திய தடியடியால் ஒரு ரசிகரின் மண்டை உடைக்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். Elon Musk Donate Revenue to Gaza: இஸ்ரேல் - காசா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிஉதவி: எக்ஸ் கார்ப்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அறிவிப்பு.!
ரசிகர்களுக்குள் எழுந்த சண்டையால், ரசிகர்கள் தாக்கப்படும் சம்பவத்தை நேரில் பார்த்து மெஸ்ஸி அதிர்ச்சியில் உறைந்தவண்ணம் செய்வதறியாது காணப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்றைய ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி அடைந்தது. பிரேசில் அணி வரலாற்றில் முதல் முறையாக தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்துள்ளது.
This actually very sad. Unacceptable from Brazil!! pic.twitter.com/mJt5Zawb5z
— Zack🥷🏿 (@HazardXMessi10) November 22, 2023