ITT Vs CSG: டிஎன்பிஎல் 2வது லீக் போட்டி.. திருப்பூர் - சேப்பாக் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
2025 டிஎன்பிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
ஜூன் 06, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் நேற்று (ஜூன் 05) தொடங்கியது. ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில், கோவை அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. DD Vs LKK: ஷிவம் சிங் அதிரடி ஆட்டம்.. திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Idream Tiruppur Tamizhans Vs Chepauk Super Gillies):
இந்நிலையில், இன்று (ஜூன் 06) ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (ITT Vs CSG, Match 2) அணிகள் மோதுகின்றன. சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 6 போட்டியிலும், திருப்பூர் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள்:
சாய் கிஷோர் (கேப்டன்), கே ராஜ்குமார், கனிபாலன் கே, ராதாகிருஷ்ணன், உத்ரசாமி சசிதேவ், சி வி அச்சுத், பிரபஞ்சன் எஸ், டேரில் ஃபெராரியோ, வி அனோவன்கர், அமித் சத்விக், துஷார் ராஹேஜா, பிரதோஷ் ரஞ்சன் பால், பாலு சூர்யா, இசக்கிமுத்து ஏ, முகமது அலி, மதிவண்ணன் எம், மோகன் பிரசாத், ரகுபதி சிலம்பரசன், பிரனவ் ராகவேந்திரா, டி நடராஜன்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:
பாபா அபராஜித் (கேப்டன்), விஜய் ஷங்கர், ஆஷிக் ரெஹ்மான், அர்ஜுன் மூர்த்தி, அபிஷேக் தன்வர், தினேஷ் ராஜ் எஸ், என் சுனில் கிருஷ்ணா, கிருபாகர் ரவீந்தர், பிரேம் குமார், ஸ்வப்னில் சிங், ராஜலிங்கம் ஜி, ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், ஜகதீசன் நாராயண், ஆர் ராஜன், எம் சிலம்பரசன், அக்ரம் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், டிடி லோகேஷ் ராஜ், ரோஹித் சுதர்.
(The above story first appeared on LatestLY on Jun 06, 2025 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

