IND Vs AUS 4th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதும் அடுத்த போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் நான்காவது டி20ஐ (IND Vs AUS 4th T20I) போட்டி (நவ.06) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
நவம்பர் 04, கோல்ட் கோஸ்ட் (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டன. அதன்படி இதுவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 20 ஓவர் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. Team India Celebration Video: உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய பெண்கள் அணி.. 52 வருடக் காத்திருப்புக்கு முடிவு.. வெற்றிக் கொண்டாட்ட வீடியோ.!
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ (India Vs Australia 4th T20I):
அதன்படி 5 போட்டிகளில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நவம்பர் 6 ஆம் தேதியான வியாழக்கிழமை இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் நான்காவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பில் பிப்பன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio Hotstar) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Sony Sports) தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஒரு நாள் போட்டி கோப்பையை தவறவிட்ட இந்தியா டி20ல் ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
5 போட்டிகளில் முதல் ஆட்டம் மழையினால் தடைபட்ட நிலையில், இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனால் நான்காவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று போட்டியை சமன் செய்யுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4 வது T20ஐ போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பாக 47% கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்தியாவுக்கு 53% கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket Match):
போட்டி அணிகள்: இந்தியா Vs ஆஸ்திரேலியா (IND Vs AUS)
போட்டி நாள்: நான்காவது டி20ஐ போட்டி நவம்பர் 06, 2025
போட்டி நேரம்: நண்பகல் 01:45 இந்திய நேரப்படி
போட்டி இடம்: பில் பிப்பன் ஓவல் கிரிக்கெட் மைதானம்
போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

