IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதும் அடுத்த போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி (நவ.08) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதும் அடுத்த போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
India vs Australia 5th T20I (Photo Credit : @BCCI X)

நவம்பர் 07, குயின்ஸ்லாந்து (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டன. அதன்படி இதுவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. IND Vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! 

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ (India Vs Australia 5th T20I):

அதன்படி 5 போட்டிகளில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நவம்பர் 8 ஆம் தேதியான சனிக்கிழமை இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் ஐந்தாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள தி கப்பா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio Hotstar) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Sony Sports) தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஒரு நாள் போட்டி கோப்பையை தவறவிட்ட இந்தியா டி20ல் ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

5 போட்டிகளில் முதல் ஆட்டம் மழையினால் தடைபட்ட நிலையில், இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து மூன்றாவது & நான்காவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனால் ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 கோப்பையை கைப்பற்றுமா? என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5 வது T20ஐ போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பாக 44% கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பாக 56% கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று டி20 கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket Match):

போட்டி அணிகள்: இந்தியா Vs ஆஸ்திரேலியா (IND Vs AUS)

போட்டி நாள்: ஐந்தாவது டி20ஐ போட்டி நவம்பர் 08, 2025

போட்டி நேரம்: நண்பகல் 01:45 இந்திய நேரப்படி

போட்டி இடம்: தி கப்பா கிரிக்கெட் மைதானம்

போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி

(The above story first appeared on LatestLY on Nov 07, 2025 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).