IND Vs ENG Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி; இந்தியா வந்து போட்டியை காணும் இங்கிலாந்து ரசிகர்கள்., உற்சாக பேட்டி.!

இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்து வைத்த இங்கிலாந்து அணி, தற்போது இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

IND Vs ENG Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி; இந்தியா வந்து போட்டியை காணும் இங்கிலாந்து ரசிகர்கள்., உற்சாக பேட்டி.!
India Vs England Test Series 2024 3rd Match (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 15, ராஜ்கோட் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் தொடர்களில் இந்திய கிரிக்கெட் (Team India) அணிக்கு எதிராக விளையாடுகிறது. தற்போது வரை 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று தலா ஒரு புள்ளிகளுடன் தொடரை சமனில் வைத்துள்ளது. இன்று (பிப் 15) முதல் மூன்றாவது ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது.

இன்று மூன்றாவது ஆட்டம்: இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. காலை 09:30 மணிமுதல் ஆட்டம் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து வருகிறது. இங்கிலாந்து (Team England) அணி பீல்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிபெற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெறும். இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஆகிய தொலைக்காட்சி மற்றும் செயலி வாயிலாக நேரலையில் காணலாம்.

இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில், ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி எஞ்சிய 3 போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

போட்டியை நேரில் காணவந்த கிரிக்கெட் ரசிகை கோபி பேசுகையில், "நான் இந்திய அணியை ஆதரிக்கிறேன். நான் இன்று உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பிடிக்கும்" என்று கூறினார். இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள ரசிகர் லுகாஸ் என்பவர் பேசுகையில், "நான் உண்மையில் உற்சாகமாக இருக்கிறேன். முதல் முறையாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை நேரில் காண வந்துள்ளேன். எனக்கு பிடித்த வீரர் ஜோ ரூட், அவரை நான் நேசிக்கிறேன்" என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய ரசிகர் மார்ட்டின், "நான் இந்தியாவில் எனது முதல் டெஸ்ட் போட்டியை பார்க்கிறேன். எனக்கு பிடித்த வீரர் பென் ஸ்டோக்ஸ். மும்பையில் இருந்து தற்போது இங்கு டெஸ்ட் போட்டியை நேரில் காண ஆவலுடன் இருக்கிறோம்" என்று கூறினார்.

மூவர்ணக்கொடியுடன் உற்சாகமாக இந்தியா - இங்கிலாந்து போட்டியை நேரில் காண காத்திருக்கும் இந்திய ரசிகர்கள்:

(The above story first appeared on LatestLY on Feb 15, 2024 10:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).