IND Vs NZ History Created: 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்திய அணி; தொடரும் வெற்றி.. குவியும் பாராட்டுக்கள்.!
2003ம் ஆண்டு இறுதியாக உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, இடையில் நடைபெற்ற பல தொடர்களில் வெற்றிக்கனியை எட்டவில்லை. தற்போது இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இருக்கிறது.
அக்டோபர் 23, தர்மசாலா (Sports News): ஐசிசி உலகக்கோப்பை 2023 (ICC Cricket World Cup 2023) போட்டித்தொடர், இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 21வது ஆட்டம், நேற்று இந்தியா - நியூசிலாந்து (India Vs New Zealand) அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய (Team India) அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் நியூசிலாந்து (Team New Zealand) அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் வில் யங் 27 பந்துகளில் 17 ரன்னும், ரசின் 87 பந்துகளில் 75 ரன்னும், மிட்செல் (Daryl Mitchell) 127 பந்துகளில் 130 ரன்னும், கிளன் 26 பந்துகளில் 23 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர்.
முதற்பகுதி ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா (Rohit Sharma) 40 பந்துகளில் 46 ரன்னும், ஹில் (Gill) 31 பந்துகளில் 26 ரன்னும், விராட் கோஹ்லி (Virat Kohli) 104 பந்துகளில் 95 ரன்னும், ஸ்ரேயாஸ் ஐயர் (S Iyer) 29 பந்துகளில் 33 ரன்னும், கேஎல் ராகுல் (KL Rahul) 35 பந்துகளில் 27 ரன்னும், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 44 பந்துகளில் 39 ரன்னும் அடித்திருந்தனர். Chengalpattu Shocker: குதிரை சவாரி தொழிலாளி கொடூரமாக வெட்டிக்கொலை; கஞ்சா போதை ஆசாமிகள் 5 பேரிடம் விசாரணை.!

48 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்த இந்திய அணி 274 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. 12 பந்துகள் எஞ்சியிருந்த சூழலில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த வெற்றி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ள வெற்றி ஆகும்.
கடந்த 2003ம் ஆண்டு இறுதியாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி அடைந்து இருந்தது. அதற்குப்பின் தற்போது வரை நியூசிலாந்து அணியை இந்திய அணி வெற்றிபெறவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்து தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லதம், டேவன் கான்வே, வில் யங், ரசின் ரவிந்த்ரா, டேரில் மிச்செல், கிளன் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிச்செல் சான்ட்நெர், மாட் ஹென்ரி, லோக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் விளையாடி இருந்தனர்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா (Rohit Sharma), ஷுப்னம் ஹில், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, மொஹம்மத் சிராஜ் ஆகியோர் விளையாடினர்.
(The above story first appeared on LatestLY on Oct 23, 2023 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

