IND Vs NEP Team India (Photo Credit: Twitter)

செப்டம்பர் 03, ஹாங்சூ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 39 பிரிவுகளில் வெவ்வேறு ஆசிய நாடுகள், தங்களின் சார்பில் விளையாட்டு வீரர்களை அனுப்பி வைத்துள்ளன. இந்தியா தற்போது வரை தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை தொடர்ந்து குவித்து வருகிறது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி சுற்று நேற்று அங்கு நடைபெற்றது. இந்தியா - நேபாள நாடுகள் இடையே நடந்த டி20 போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து அசத்தலாக ரன்களை குவித்தது. Hunter Biden Hired Prostitutes: ஐரோப்பிய விபச்சார கும்பலுடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளி: வங்கிக்கணக்குகளை வைத்து அம்பலமான உண்மைகள்.! 

ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்தது. ஜெய்ஷ்வால் 49 பந்துகளில் 100 ரன்னும், ருத்ராஜ் 23 பந்துகளில் 25 ரன்னும், சிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்னும், ரிங்கு சிங் 15 பந்துகளில் 35 ரன்னும் எடுத்திருந்தனர்.

IND Vs NEP Team India Hongzhou 2023 (Photo Credit: Twitter)

மறுமுனையில் களமிறங்கிய நேபாள அணியினர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு நேபாள அணி 179 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வானது. Tirunelveli Crime News: காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக்கொலை: திட்டமிட்டு ஒருதலைக்காதலன் நடத்திய வெறிச்செயல்.. குடும்பத்தினர் கண்ணீர்.! 

இந்திய அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (wk) , ஆகாஷ் தீப் ஆகியோர் விளையாடினர்.

நேபாள அணியின் சார்பில் குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், பினோத் பண்டாரி, சுந்தீப் ஜோரா, குல்சன் ஜா, ரோஹித் பவுடல், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, சோம்பால் கமி, அபினாஷ் போஹாரா, சந்தீப் லாமிச்சானே, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி, பிரதிஸ் ஜிசி, பிபேக் யாதவ் ஆகியோர் விளையாடினர்.