IND Vs SA ODI: இன்று தென்னாபிரிக்கா - இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் தொடக்கம்: முழு விபரம் இதோ.!
Team India (Photo Credit @BCCI X)

டிசம்பர் 17, ஜோக்கன்ஸ்பர்க் (Sports News): தென்னாபிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்துவிட்டன.

சமன் செய்யப்பட்ட டி20 தொடர்: 3 டி20 போட்டியில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி அடைந்தது. இதனால் இந்தியா - தென்னாபிரிக்க அணி மோதிய டி20 போட்டித்தொடர் தலா 1 புள்ளிகள் மதிப்பீட்டில் சமன் செய்யப்பட்டது.

இன்று முதல் போட்டி: டிசம்பர் 17ம் தேதியான இன்று ஒருநாள் (India Vs South Africa ODI 2023) போட்டிகள் தொடங்குகிறது. இன்று மதியம் இந்திய மேற்படி 01:30 மணிக்கு போட்டிகள் தொடங்கி நடைபெறுகிறது. முதல் ஆட்டம் அங்குள்ள கௌதெங் மாகாணத்தில் அமைந்துள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. Orange & Yellow Alert: 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; ஆரஞ்சு & மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு.! 

நேரலையில் பார்க்க: கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும், ஏஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் மோதிக்கொள்கின்றன. இப்போட்டியை நேரலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலி, ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி ஆகியவற்றில் கண்டுகளிக்கலாம்.

அடுத்தடுத்த ஆட்டங்கள்: இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்கள் டிசம்பர் 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. டி20 போட்டி சமனில் முடிந்துவிட்டாலும், ஒருநாள் போட்டியில் வெற்றிக்கோப்பையை கைப்பற்ற இரண்டு அணிகளும் போராடும் என்பதால், அடுத்த 3 ஆட்டங்களும் விறுவிறுப்புடன் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.