IND Vs UAE: ஆசிய கோப்பை 2025; 2வது லீக் போட்டி.. இந்தியா - யுஏஇ அணிகள் நாளை பலப்பரீட்சை..!

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரின் 2வது லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா எதிர் யுஏஇ அணிகள் நாளை (செப்டம்பர் 10) மோதுகின்றன.

IND Vs UAE: ஆசிய கோப்பை 2025; 2வது லீக் போட்டி.. இந்தியா - யுஏஇ அணிகள் நாளை பலப்பரீட்சை..!
IND Vs UAE 2nd Match Asia Cup 2025 (Photo Credit: @MSDianMrigu X | @Cric_records45 X)

செப்டம்பர் 09, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், இன்று (செப்டம்பர் 09) முதல் தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். சோனி லிவ் ஓடிடி தளத்திலும், நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. AFG Vs HKG: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. ஹாங்காங் வெற்றிக்கு 189 ரன்கள் இமாலய இலக்கு..!

இந்தியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (India Vs United Arab Emirates):

இந்நிலையில், இரண்டாவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (IND Vs UAE) அணிகள் நாளை (செப்டம்பர் 10) மோதுகின்றன. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:

முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், எதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.

(The above story first appeared on LatestLY on Sep 09, 2025 10:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).