India Women Vs Australia Women: இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு.!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

INDW Vs AUSW ICC Women's Cricket Cup 2025 (Photo Credit : @ICC X)

அக்டோபர் 12, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரை 12 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அக்டோபர் 11-ஆம் தேதி இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13-வது போட்டியில் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) மோதுகின்றன. Ind Vs WI Highlights, 2nd Test: மாயாஜாலம் செய்த குல்தீப் & ஜடேஜா.. இந்தியா மாஸ் வெற்றி.. மண்ணைக்கவ்விய வெஸ்ட் இண்டீஸ்.. கிரிக்கெட் ஹைலைட்ஸ்.!

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் (India - Australia Women's Cricket Match):

இந்த போட்டி அக்டோபர் 12-ஆம் தேதியான இன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். முன்னதாக கடந்த அக்டோபர் 09-ஆம் தேதி இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும், 26 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராகவும் களமாடுகிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs Australia):

போட்டி அணிகள்: இந்தியா W Vs ஆஸ்திரேலியா W (India Women's Vs Australia Women's Cricket)

நடைபெறும் இடம்: ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

இந்தியா பெண்கள் Vs ஆஸ்திரேலியா பெண்கள் அணி விபரம் (India Women Vs Australia Women Squad):

இந்தியா பெண்கள் (India Women Squad):

பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி

ஆஸ்திரேலியா பெண்கள் (Australia Women Squad):

அலிசா ஹீலி (C), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ, கிம் கார்த், அலானா கிங், மேகன் ஷட்

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement