Hardik Pandya Workout: "ஒரே திசையில் செல்வோம்" - ஐபிஎல் 2024 க்காக தீவிரமாக தயாராகும் ஹர்திக்.. கடுமையாகும் உடற்பயிற்சி.!
காயம் காரணமாக சர்வதேச அளவிலான போட்டியில் ஹர்திக் கலந்துகொள்ள முடியவில்லை எனினும், விரைவில் அவர் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார்.
ஜனவரி 08, புதுடெல்லி (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), சமீபத்தில் காயம் காரணமாக தென்னாபிரிக்கா - இந்தியா இடையேயான ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்தியாவுக்கு திரும்பிய ஹர்திக், எதிர்வரும் போட்டிக்காக தயாராகி வந்தார்.
ஐபிஎல்-க்கு தயாராகும் ஹர்திக்: ஆப்கானிஸ்தான் - இந்தியா (AFG Vs IND) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திலும், ஹர்திக் பாண்டியாவின் பெயர் என்பது அறிவிக்கப்படவில்லை. இதனால் ஐபிஎல் தொடருக்கு ஹர்திக் முழுவீச்சுடன் தயாராகி வருகிறது. இதனால் அவர் ஐபிஎல் 2024 தொடரில் திறம்பட செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Woman Strangled and Robbed: தனியாக வந்த பெண்ணை தாக்கி வழிப்பறி; சிசிடிவி கேமிராவில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்.!
தீவிர உடற்பயிற்சி: ஐபிஎல் 2024 தொடரில் ஹ்ர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குகிறார். முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக், இந்த போட்டியில் மும்பை அணிக்காக (Mumbai Indians) விளையாடுகிறார். இது ஆட்டத்தின் தரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் அசத்தல் காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jan 08, 2024 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

