Virat Kohli Anushka Sharma: எல்லையில்லாத காதலில் தவிக்கும் விராட் கோலி: திருமண நாளில் ஜோடியாக ஸ்மார்ட் கிளிக்...!
Virat Kohli & Anushka Sharma (Photo Credit: @imVkohli)

டிசம்பர் 12, புதுடெல்லி (New Delhi): கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, தற்போது வரை தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் களமிறங்கி, இந்திய அணிக்காக தனது அர்ப்பணிப்பான விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான உள்ளங்களின் மனதை கவர்ந்தவர் விராட் கோலி (Virat Kohli).

ஆர்.சி.பி அணியின் கேப்டன்: இவர் ரசிகர்களால் கிங் கோலி என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான விராட் கோலி, டி 20, டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் தொடர் உட்பட பல விளையாட்டுகளில் விளையாடுகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகவும் இவர் பணியாற்றி வருகிறார்.

மத்திய அரசின் விருதுகள்: ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னணியில் இருக்கும் விராட் கோலிக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக, கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியது. 2017ல் பத்மஸ்ரீ விருதும், 2018ல் கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான நபர்களில், இவர் முதல் 100 நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார். Instagram Famous Died: 19 வயதில் இப்படி நடக்கணுமா?.. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 நாளில் இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் மரணம்.! 

நடிகையுடன் திருமணம்: கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி பிரபல இந்தி திரைப்பட நடிகையான அனுஷ்கா சர்மாவை (Anushka Sharma) திருமணம் செய்து கொண்டு, தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் குழந்தையும் இருக்கிறது. இன்று அவர்களின் திருமண நாள் ஆகும்.

எல்லையில்லாத காதல்: இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, எல்லையில்லாத காதல் என்று எமோஜி-யில் அதனை தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இருவருக்கும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.