India Women vs Australia Women: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?.. வானிலை நிலவரம்.. ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.!

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 12-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

Harmanpreet Kaur & Alyssa Healy | INDW Vs AUSW ICC Women's Cricket Cup 2025 (Photo Credit : @ICC X)

அக்டோபர் 11, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரை 11 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் (India - Australia Women's Cricket Match):

இதில் 13-வது போட்டியில் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) மோதுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 12-ஆம் தேதியான நாளை ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். முன்னதாக கடந்த அக்டோபர் 09-ஆம் தேதி இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து அக்டோபர் 12 ஆம் தேதியான நாளை ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும், 26 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராகவும் களமாடுகிறது.

வானிலை நிலவரம்:

விசாகப்பட்டினத்தை பொறுத்தவரையில் ஆட்டம் நடைபெறும் போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், வானிலை ஈரப்பதமாகவும், மேகமூட்டமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் போட்டி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், விளையாட்டு சில நிமிடங்கள் தள்ளி வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களும் முக்கிய பங்கு வகிக்கலாம். Ind Vs WI Highlights, 2nd Test: ஜடேஜா அசத்தல்.. ஒரேநாளில் 4 விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி.. இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி.!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வெற்றி வாகை சூடப்போவது யார்? (India Vs Australia Women's Cricket Winning Prediction):

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025-ல் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா 2 வெற்றிகளை பெற்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய இருக்கின்றனர். இந்த போட்டியை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு 68% வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுக்கு கடினமான சவாலான போட்டியை கொடுக்கும். கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் மோதி இந்தியா தோல்வியடைந்ததால் இம்முறை சவாலான போட்டியை வழங்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது. இரண்டு அணியும் சமமான அளவு திறனுடன் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs Australia Pitch Report and Winning Prediction):

  • போட்டி அணிகள்: இந்தியா W Vs ஆஸ்திரேலியா W (India Women's Vs Australia Women's Cricket)
  • நடைபெறும் இடம்: ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்
  • போட்டி முறை: 50 ஓவர்கள்
  • போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி
  • நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)
  • விக்கெட் கீப்பர்கள்: பெத் மூனி (AUS-W), அலிசா ஹீலி (AUS-W), ரிச்சா கோஷ் (IND-W)
  • பேட்டர்ஸ்: எலிஸ் பெர்ரி (AUS-W), ஸ்மிருதி மந்தனா (IND-W), ஹர்மன்பிரீத் கவுர் (IND-W)
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆஷ்லே கார்ட்னர் (AUS-W), அன்னாபெல் சதர்லேண்ட் (AUS-W), தீப்தி சர்மா (IND-W)
  • பந்து வீச்சாளர்கள்: மேகன் ஷூட் (AUS-W), கிம் கார்த் (AUS-W)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement