INDW Vs NZW: நியூசி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.. இந்தியா பெண்கள் Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடக்கம்.!

இந்தியா பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) மோதும் இன்றைய போட்டியில், இந்திய பெண்கள் அணி (INDW Vs NZW Toss Update) முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டி நவிமும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

INDW Vs NZW: நியூசி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.. இந்தியா பெண்கள் Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடக்கம்.!

அக்டோபர் 23, நவி மும்பை (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup) தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 31 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 23 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. IND Vs AUS: வெளுத்துக்கட்டிய சுரேஷ் ரெய்னா, ஷ்ரேயஸ் ஐயர்.. 265 ரன்கள் இலக்கு.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.!

இந்தியா பெண்கள் எதிர் நியூசிலாந்து பெண்கள் (INDW Vs NZW Cricket):

தொடர்ந்து, இன்று நவி மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், இந்திய பெண்கள் தேசியா மகளிர் கிரிக்கெட் அணி Vs நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நண்பகல் 03:00 மணியளவில் ஆட்டம் தொடங்குகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தொடர் மழையால் கடந்த 2 ஆட்டங்களை விளையாடாத நியூசிலாந்து அணியும், தொடர் 2 தோல்வியை தழுவிய இந்திய அணியும் பலப்பரீட்சை செய்கிறது. India Women Vs New Zealand Women: இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு? 

இந்திய அணி முதலில் பேட்டிங் (India Women Vs New Zealand Women Toss Update):

இந்நிலையில், நண்பகல் 02:30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் என்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் ஷோபி பந்துவீச்சை தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க ஏற்ற மைதானத்தை பயன்படுத்திக்கொண்டால், போட்டியில் வெற்றி நம்வசப்படும். அதே நேரத்தில், சேசிங் செய்வதற்கும் மும்பை மைதானம் ஏற்றது. இந்த மைதானத்தில் அதிக ஸ்கோர் குவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் (INDW Vs NZW Squad for New Zealand):

சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (C), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இஸி கேஸ் (WK), ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹு, ஈடன் கார்சன்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் (INDW Vs NZW Squad for India):

பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா (C), ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (WK), ஸ்னே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சிங்காரணி, ரேணுகா.

இந்தியா பெண்கள் Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட்:

(The above story first appeared on LatestLY on Oct 23, 2025 02:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).