IPL 2023: ஐ.பி.எல் போட்டியை தொகுத்து வழங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்த ரவி சாஸ்திரி.!
இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மார்ச் 30 (Cricket News): 2023ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31ம் தேதியான நாளை முதல் தொடங்குகிறது. முதல் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த போட்டியை Jio Cinema App-ல் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. TATA IPL 2023 போட்டி Star Sports நிர்வாகத்தால் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய அளவிலான ரசிகர்கள் ஐ.பி.எல் தொடரை அதிகம் பார்ப்பார்கள் என்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல பிராந்திய மொழிகளிலும் அவை ஒளிபரப்பு செய்யப்படும். Fake News Alert: இருதரப்பு மோதல் குறித்து அவதூறு பரப்பியதாக சிக்கிக்கொண்ட வி.ஜே.. உண்மை அறியாமல் அவசரத்தால் நடந்த சம்பவம்.!
இந்த நிலையில், முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக உலக அரங்கில் விளையாடிய வீரர்களில் முக்கியமானவர் ஆவார். இவரின் அறிவுரைகளை கேட்க பலரும் காத்திருப்பார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
Just what the doctor ordered!
Welcoming @RaviShastriOfc to the incredible star cast @StarSportsIndia
Join him live. Tune-in to #IPLonStar on Mar 31 | Pre-show at 5 PM & LIVE action at 7:30 PM | Star Sports Network#ShorOn #GameOn #BetterTogether pic.twitter.com/7cul4It7iC
— Star Sports (@StarSportsIndia) March 29, 2023
(The above story first appeared on LatestLY on Mar 30, 2023 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

