IPL 2024 Auction: ஐபிஎல் ஏலம் 2024 எங்கு நடக்க உள்ளது?. பங்கு பெறவிருக்கும் முழு போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ..!
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
டிசம்பர் 12, டெல்லி (Delhi) : ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 17வது சீசன் நடைபெற உள்ளது. இது அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கான ஐபிஎல் மினி ஏலம் தற்போது நடைபெற உள்ளது.
ஐபிஎல் மினி ஏலம்: இந்த ஆண்டு ஐபிஎல் ஏலமானது (IPL 2024 auction) ஒரு நாள் மட்டுமே நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மினி ஏளமானது வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலமானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரடிப்படி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்க இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. Vijayakanth Discharged: 20 நாட்களுக்கு பின்பு வீடு திரும்பும் விஜயகாந்த்: விஜயகாந்த் அறிக்கை!
ஏலத்தில் பங்குபெறவுள்ள வீரர்கள்: இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 1166 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் அதில் பல பேர் அதிரடியாக நீக்கப்பட்ட தற்போது ஏலத்தில் 333 வீரர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இந்த 333 வீரர்களில் 214 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Dec 12, 2023 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

