MS Dhoni With Friends: நண்பர்களுடன் குழந்தையாக மாறிப்போன தல தோனி; எளிமையுடன் புன்முறுவலோடு தல தோனி.!

MS Dhoni; The Untold Story திரைப்படத்திலேயே தோனி நண்பர்களுக்கு அளித்த முக்கியத்துவம் நம்மை கட்டிப்போட்டது.

Mahendra Singh Dhoni with his Friends (Photo Credit: Twitter)

ஜூன் 16, ராஞ்சி (Ranchi): பீகார் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்து, இந்திய மண்ணுக்கு கிரிக்கெட் விளையாட்டில் பெருமை சேர்த்தவர் மகேந்திர சிங் தோனி என்ற எம்.எஸ் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இருக்கும் தோனி (Mahendra Singh Dhoni) இந்தியாவின் அடையாளம் ஆவார்.

அவரின் பேட்டிங் ஸ்டைலும், விக்கெட் கீப்பிங் மின்னல் செயல்பாடுகளும் உலகளவில் பிரபலம் ஆகும். கிரிக்கெட்டில் மாஸாக இருக்கும் தோனி இருசக்கர வாகனத்தின் பிரியர் மற்றும் இயற்கை காதலன் ஆவார். இதனால் தனது இல்லத்தில் இருசக்கர வாகனங்களுக்கு என தனியாக நிறுத்தும் கூடம், பண்ணை வீட்டில் விவசாயம் என மகிழ்ச்சியுடன் குடும்பத்தோடு இருந்து வருகிறார்.

இந்நிலையில், தல தோனி தனது குழந்தைப்பருவ நண்பர்களுடன் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. தோனியின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட திரைப்படமாக உருவாகிய MS Dhoni; The Untold Story திரைப்படத்திலேயே தோனி நண்பர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்த காட்சிகள் நம்மை நண்பர்களுடன் கட்டிப்போடும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement