MSD on YogiBabu: சி.எஸ்.கே அணியில் யோகிபாபுவுக்கு வாய்ப்பு?. எம்.எஸ் தோனி கலக்கல் பதில்..!

உங்களின் திறமைக்கேற்ப நிர்வாகம் உங்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வாய்ப்பை வழங்கும் என தோனி பேசினார்.

MSD on YogiBabu: சி.எஸ்.கே அணியில் யோகிபாபுவுக்கு வாய்ப்பு?. எம்.எஸ் தோனி கலக்கல் பதில்..!
MS Dhoni | Yogi Babu (Photo Credit: Twitter)

ஜூலை 12 , சென்னை (Cricket News): ஹரிஷ் கல்யாண், யோகிபாபு, இவானா, நதியா உட்பட பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் Lets Get Married எல்.ஜி.எம் (LGM). இந்த படத்தை எம்.எஸ் தோனி தனது தோனி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வழங்குகிறார்.

படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், எம்.எஸ் தோனி & சாக்ஷி தோனி நேரடியாக வந்து தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இருவரும் தங்களின் தமிழ்நாடு காதல் தொடர்பாக மனம்விட்டு பேசி இருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் யோகிபாபு தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இடம்வேண்டம் என நகைச்சுவையாக எம்.எஸ் தோனியிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த தோனி, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு ஓய்வு பெறுகிறார்.

அதனால் அணியில் ஒரு இடம் இருக்கிறது. நான் சி.எஸ்.கே அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். உங்களின் திறமைக்கேற்ப நிர்வாகம் உங்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வாய்ப்பை வழங்கும்" என பேசினார்.

(The above story first appeared on LatestLY on Jul 12, 2023 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).