MS Dhoni Reaction: விமான நிலையத்தில் தோனியிடம் நலம் விசாரித்த ரசிகர்; தோனி என்ன பதில் கூறினார் தெரியுமா?.! வீடியோ வைரல்.!
எம்.எஸ் தோனி & சாக்ஷி தோனி இணைந்து Dhoni Entertainment தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, முதல் திரைப்படமாக தமிழ் மொழியில் Let's Get Married படத்தை தயாரித்து வழங்குகின்றனர்.
ஜூலை 10, சென்னை விமான நிலையம் (Chennai Airport): டாடா ஐ.பி.எல் 2023 போட்டித்தொடரில் வெற்றியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐ.பி.எல் நிறைவுக்கு பின்னர் தனது முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்றார்.
மும்பையில் உள்ள அம்பானியின் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறி தனது வேலைகளை அவர் கவனிக்க தொடங்கினார். சமீபத்தில் அவரின் பிறந்தநாள் வெகு விமர்சையாக ரசிகர்கள் கொண்டாடப்பட்டது. China Shocker: மழலையர் பள்ளியில் வெறியாட்டம்; 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொடூர கொலை; 25 வயது இளைஞர் வெறிச்செயல்.!
எம்.எஸ் தோனி & சாக்ஷி தோனி இணைந்து Dhoni Entertainment தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, முதல் திரைப்படமாக தமிழ் மொழியில் Let's Get Married படத்தை தயாரித்து வழங்குகின்றனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, விடிவி கணேஷ், வெங்கட் பிரபு மற்றும் யோகி பாபு உட்பட பலரும் நடிக்கின்றனர்.
ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் நகைச்சுவை கதையுடன் படம் தயாராகியுள்ளது. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை படத்தயாரிப்பு குழு மேற்கொண்டுள்ளது. Hyderabad Horror: ஆணுறுப்பை துண்டித்து மருத்துவ மாணவர் மரணம்; மனநல பாதிப்பால் நடந்த பயங்கரம்.. ஹைதராபாத்தில் அதிர்ச்சி.!!
இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்தடைந்த எம்.எஸ் தோனி - சாக்ஷி தோனிக்கு ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அவர் விமான நிலையத்தின் முற்பகுதி வழியே வரும்போது, ரசிகர் ஒருவர் அவரின் முட்டி எப்படி இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு எம்.எஸ் தோனி பதில் அளிக்கவில்லை என்றாலும், அவரின் புன்னகை தான் நலமுடன் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jul 10, 2023 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

