Dhoni Handsome Look At SRK Birthday: ஷாருக்கானின் பிறந்தநாளில் அசத்தல் தோற்றத்துடன் தல தோனி; வெளியான போட்டோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!

எப்போதும் ஸ்டைலாக இருக்கும் தல தோனி, தற்போது ஷாருக்கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கோட் சூட்டுடன் புதிய ஸ்டைலில் இருந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Dhoni Handsome Look At SRK Birthday: ஷாருக்கானின் பிறந்தநாளில் அசத்தல் தோற்றத்துடன் தல தோனி; வெளியான போட்டோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!
MS Dhoni at SRK Birthday (Photo Credit: X)

நவம்பர் 03, மும்பை (Sports News): ஹிந்தி திரையுலகின் கிங் கான் (King Khan) என்று போற்றப்படும், நடிகர் ஷாருக்கானின் (Shan Rukh Khan) பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் நேற்று தனது 58 வயதில் அடியெடுத்து வைத்தார்.

வயது எண்ணிக்கைக்கும் - தோற்றத்திற்கும் ஒவ்வாத, உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ள நடிகர் ஷாருக்கானின் திரையுலக பயணத்தை பாராட்டி, மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் அளித்தது. அவர் 14 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் நாடுகளை கடந்து ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஷாருக்கானுக்கு, இந்தியாவில் ஹிந்தியை கடந்து தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். நடிகர் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருடன் அவர் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறார். தன்னை ரஜினியின் மிகத்தீவிர ரசிகராகவும் அவர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். Urfi Javed Arrested?: பிரபல ஹிந்தி நடிகை காவல்துறையினரால் கைது?.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! விபரம் உள்ளே.! 

MS Dhoni (Photo Credit: @IPL Twitter)

நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் இல்லத்தில் நள்ளிரவு (SRK Birthday Celebration) திரண்டிருந்த ரசிகர்கள் முன் தோன்றி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார். நேற்று இவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பல முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் (MS Dhoni) கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் தனது புதிய தோற்றத்துடன் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தார்.

அவரின் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தோனியின் தோற்றம் அசத்தலாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Nov 03, 2023 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).