MS Dhoni Vacation: குடும்பத்துடன் இன்பசுற்றுலா செல்லும் தல தோனி: விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.!
MS Dhoni Family Vacation (Photo Credit: @DHONIism X)

டிசம்பர் 09, சென்னை (Chennai): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி. இவர் தற்போது சர்வதேச அளவிலான டி20, ஒருநாள் கோப்பை உட்பட பல போட்டிகளில் இருந்து விலகி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகித்து வருகிறார்.

இந்திய அணியின் சாதனை: இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியபோது, இந்திய அணி சர்வதேச அளவில் பல சாதனைகள் படைத்திருந்தது. பல ஆண்டுகளுக்கு பின் உலகளவில் கிரிக்கெட் கோப்பையை வெற்றிபெற்று இந்தியா தனது கைகளில் ஏந்தியது.

மைதானமே உச்சரிக்கும் ஒரே பெயர்: மைதானங்களில் துடிப்பான நாயகனாக இருக்கும் எம்.எஸ் தோனிக்கு ரசிகர்கள் ஏராளம். அவர் களமிறங்கிய மைதானமே அதிரும் அளவு தோனியின் பெயர் ரசிகர்களால் உச்சரிக்கப்படும்.

2024 ஐபிஎல் தொடருக்கு தயாராகும் தோனி: மின்னல் வேகத்தில் செயல்படும் திறன் கொண்ட தோனி, மிஸ்டர் கூல், தல தோனி, எம்எஸ்டி உட்பட பல பெயர்களால் ரசிகர்களால் அழைக்கப்படுவார். 2024 ஐபிஎல் தொடருக்காக தோனி தயாராகிவரும் அதே வேளையில், குடும்பத்தினருடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

குடும்பத்துடன் சுற்றுலா: தற்போது தோனி தனது மனைவி உட்பட குடும்பத்தினருடன் விமானத்தில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் விமானத்திற்குள் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.