அக்டோபர் 22, புனே (Sports News): இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ) இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து முடிந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. BAN Vs RSA 1st Test: ககிசோ ரபாடா புதிய மைல்கல்.. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை..!
இதனையடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, புனேவில் வரும் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காயம் முழுமையாக குணமடையாததால் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (New Zealand Cricket Board) தற்போது அறிவித்துள்ளது.