IND Vs NZ Test: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேன் வில்லியம்சன் விலகல்.. காரணம் என்ன..?

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Kane Williamson (Photo Credit: @Akaran_1 X)

அக்டோபர் 22, புனே (Sports News): இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ) இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து முடிந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. BAN Vs RSA 1st Test: ககிசோ ரபாடா புதிய மைல்கல்.. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை..!

இதனையடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, புனேவில் வரும் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காயம் முழுமையாக குணமடையாததால் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (New Zealand Cricket Board) தற்போது அறிவித்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement