FIFA Posts Children's Day Wishes in Tamil: உலகளவில் அடையாளம் பெற்ற தமிழ்: பீஃபா கால்பந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் பதிவு‌.!

பீஃபா உலகக் கோப்பை கால்பந்து இன்ஸ்டா பக்கத்தில் தமிழில் வீடியோவினை பதிவு செய்துள்ளனர்.

FIFA Posts Children's Day Wishes in Tamil: உலகளவில் அடையாளம் பெற்ற தமிழ்: பீஃபா கால்பந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் பதிவு‌.!
Lionel Messi with son Ciro (Photo Credit: Instagram/@fifaworldcup)

நவம்பர் 14, தம்புல்லா (Sports News): நாட்டில் உள்ள குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக (Children’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் தான் நம் இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் ‘நேரு மாமா’ என்று அன்புடன் நினைவுகூரப்படும் ஜவஹர்லால் நேருவின் (Jawaharlal Nehru) பிறந்தநாளையும் நாம் நினைவுகூருகிறோம். SL Vs NZ 1st ODI: 27 ஓவர் 221 ரன் இலக்கு.. இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. நியூசிலாந்து ஏமாற்றம்..!

குழந்தைகள் தினத்தில் தமிழில் வாழ்த்து: இந்நிலையில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பீஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழில் வாழ்த்தினை (Children's Day Wishes) பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இளையராஜாவின் கண்மணி அன்போடு பாடலை பின்னணி இசையாக கொடுத்துள்ளனர். கால்பந்தின் நட்சத்திரமான ரொனால்டோ மெஸ்ஸி மற்றும் அவரது குழந்தை அந்த வீடியோவில் உள்ளனர். மேலும் கேப்ஷனில் "நிறைவு" என்று கொடுத்துள்ளனர். இவ்வளவு பெரிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழில் பதிவு செய்யப்பட்டிருப்பது உலக அளவில் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகவும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் உள்ளது.  தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுவதும் கலக்கி வருகிறது.

உலகளவில் கவனிக்கப்பட்ட பீஃபா கால்பந்தாட்ட இன்ஸ்டா பக்கம்:

 

View this post on Instagram

 

A post shared by FIFA World Cup (@fifaworldcup)

(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).