PAK Vs SA, 1st ODI: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் த்ரில் வெற்றி..!
பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நவம்பர் 04, பைசலாபாத் (Sports News): தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டி20ஐ தொடரை, பாகிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றியது. இந்நிலையில், பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா (PAK Vs SA) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (நவம்பர் 04) பைசலாபாத்தில் உள்ள இக்பால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. PAK Vs SA 1st ODI: தென்னாப்பிரிக்கா 263 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தான் அபார பந்துவீச்சு..!
பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (Pakistan Vs South Africa):
இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷஹீன் அப்ரிடி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 49.1 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 63 ரன்கள், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 57 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் அப்ரார் அகமது தலா 3, சைம் அயூப் 2, முகமது நவாஸ் மற்றும் ஷஹீன் அப்ரிடி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் வெற்றி:
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் அடித்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சல்மான் ஆகா 62 ரன்கள், முகமது ரிஸ்வான் 55 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் லுங்கி என்கிடி, கார்பின் போஷ் மற்றும் டோனோவன் ஃபெரீரா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சைம் அயூப், ஃபகார் ஜமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி (கேப்டன்), நசீம் ஷா, அப்ரார் அகமது.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
குயின்டன் டி காக், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டோனி டி ஜோர்ஜி, மேத்யூ ப்ரீட்ஸ்கே (கேப்டன்), சினெதெம்பா கேஷிலே, டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஜார்ன் ஃபார்டுயின், லுங்கி என்கிடி, லிசாட் வில்லியம்ஸ்.
(The above story first appeared on LatestLY on Nov 04, 2025 11:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

