PKL 2025: பிகேஎல் 2025; டெல்லி - பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் - பாட்னா அணிகள் இன்று மோதல்..!
ப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்றைய போட்டியில், 9வது லீக் போட்டியில், டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 10வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
செப்டம்பர் 02, விசாகப்பட்டினம் (Sports News): 2025 ப்ரோ கபடி லீக் (PKL) தொடர், 12வது சீசன் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தத் தொடரில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பை ஹரியானா ஸ்டீலர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உபி யோதாஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் தொடர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 2025 ப்ரோ கபடி லீக் சீசன் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். ENG Vs SA 1st ODI, Toss: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
ப்ரோ கபடி லீக் 2025 இன்றைய போட்டிகள் (Pro Kabaddi League 2025 Today Matches):
இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 7வது லீக் போட்டியில் உபி யோதாஸ் 34-31 என பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடந்த 8வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்தான்ஸ் 41-19 என குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 02) இரவு 8 மணிக்கு நடைபெறும் 9வது லீக் போட்டியில், டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் (Dabang Delhi Vs Bengaluru Bulls)அணிகளும், இரவு 9 மணிக்கு 10வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் (Jaipur Pink Panthers Vs Patna Pirates) அணிகளும் மோதுகின்றன.
(The above story first appeared on LatestLY on Sep 02, 2025 07:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

