ZIM Vs NZ: மேட் ஹென்றி அபார பந்துவீச்சு.. நியூசிலாந்து வெற்றி பெற 121 ரன்கள் இலக்கு..!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது போட்டியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs NZ 1st Batting (Photo Credit: @ZimCricketv X)

ஜூலை 18, ஹராரே (Sports News): தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறும். அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். ZIM Vs NZ, Toss: நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

இந்நிலையில், இன்று (ஜூலை 18) நடைபெறும் 3வது லீக் போட்டியில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்கள் வெஸ்லி மாதேவெரே 36, பிரையன் பென்னட் 21 ரன்கள் அடித்து நிதானமான தொடக்கம் கொடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் கிளைவ் மடாண்டே 8, சிக்கந்தர் ராசா 12, ரியான் பர்ல் 12, தஷிங்கா முசெகிவா 4 ரன்கள் என சொற்ப ரன்களில் வெளியேறினர். ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் அடித்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):

வெஸ்லி மாதேவெரே, பிரையன் பென்னட், கிளைவ் மடாண்டே, சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, டினோடெண்டா மபோசா, டோனி முனியோங்கா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டிம் சீஃபர்ட், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஆடம் மில்னே, மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement