Pahalgam Terror Attack: பஹல்கம் பயங்கரவாத தாக்குதல்.. பிசிசிஐ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிர்வாகம் இரங்கல்.!

பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களுடன் துணை நிற்பதாக பிசிசிஐ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Pahalgam Terror Attack: பஹல்கம் பயங்கரவாத தாக்குதல்.. பிசிசிஐ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிர்வாகம் இரங்கல்.!
IPL & Star Sports Pay Tribute to Pahalgam Terror Attack Deaths (Photo Credit: @IPL / @ANI X)

ஏப்ரல் 23, ஹைதாபாத் (Sports News in Tamil): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. Mukesh Kumar: மூன்று போரில் தொடங்கி W0Wல் முடித்த முகேஷ் குமார்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..! 

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்:

இந்நிலையில், இன்றைய போட்டியின் தொடக்கத்தில், அணியின் வீரர்கள் மற்றும் டாடா ஐபிஎல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் சார்பில் பஹல்கம் தாக்குதல் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து போட்டி தொடங்கி நடைபெற்றது.

பஹல்கம் தாக்குதல் (Pahalgam Terror Attack News in Tamil):

ஏப்ரல் 22, 2025 நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்கம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுளளது. மேலும், இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகள் துணை நிற்பதாகவும் கூறியுள்ளது.

பஹல்கம் தாக்குதல் விஷயத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்க இன்றைய போட்டிக்கு முன்பு அஞ்சலி செலுத்திய காணொளி:

பிசிசிஐ நிர்வாகம் இரங்கல்:

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 08:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).