RCB Vs CSK: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? இன்று சென்னை - பெங்களூர் அணிகள் மோதல்.!

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு (Chennai Super Kings Vs Royal Challengers Bengaluru IPL 2025) இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

RCB Vs CSK: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? இன்று சென்னை - பெங்களூர் அணிகள் மோதல்.!
Virat Kohli Vs MS Dhoni (Photo Credit: @Cric_records45 X)

மே 03, பெங்களூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் 20 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. மறுமுனையில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே சேகரித்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி அடைந்தது. இதனால் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி தன்னை தக்கவைத்துக்கொண்டது. GT Vs SRH: வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா குஜராத்? இன்று ஹைதராபாத் அணியுடன் மோதல்.! 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் (Royal Challengers Bangalore Vs Chennai Super Kings):

அதனைத்தொடர்ந்து, இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 07:30 மணியளவில் தொடங்கி இந்த ஆட்டம் நடைபெறுகிறது. ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் (IPL 2025 Points Table) 3 வது இடத்தில் தன்னை தக்கவைத்துக்கொண்டு முதல் கோப்பைக்கான போராடும் பெங்களூர் அணியும், இதுவரை 5 கோப்பைகள் இருக்கிறதே என்ற மமதையில் விளையாடி வரும் சென்னை அணியும் இன்று மோதுகிறது. நடப்பு தொடரில் இனி சென்னை கோப்பைக்கு கனவு மட்டுமே காணலாம் என்ற நிலையில், வெற்றியை பெங்களூர் தக்கவைக்குமா? ஆறுதல் வெற்றியாவது சென்னைக்கு கிடைக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 03, 2025 07:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).