BAN Vs PAK 2nd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 2வது டி20.. வெல்ல போவது யார்..?

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, நாளை (ஜூலை 22) தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

BAN Vs PAK 2nd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 2வது டி20.. வெல்ல போவது யார்..?
BAN Vs PAK 2nd T20I (Photo Credit: @abhinandps X)

ஜூலை 21, தாக்கா (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அனைத்து போட்டிகளும், தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஃபேன் கோட் செயலியில் நேரலையில் பார்க்கலாம். நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. ZIM Vs NZ: நியூசிலாந்து அதிரடி தொடக்கம்.. 43 ரன்னுக்கு 1 விக்கெட் இழப்பு..!

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் (Bangladesh Vs Pakistan):

இந்நிலையில், வங்கதேசம் - பாகிஸ்தான் (BAN Vs PAK) அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி, நாளை (ஜூலை 22) தாக்காவில் நடைபெறவுள்ளது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. வங்கதேச அணி 4 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

வங்கதேசம் அணி வீரர்கள்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), பர்வேஸ் ஹொசைன் எமன், தன்சித் ஹசன் தமீம், டவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜாக்கர் அலி, மகேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, நசும் அகமது, முகமது சைபுதீன், முகமது நைம்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சல்மான் அலி ஆகா (கேப்டன்), சைம் அயூப், ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான், குஷ்தில் ஷா, ஹுசைன் தலாத், ஃபஹீம் அஷ்ரப், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, முகமது நவாஸ், அகமது டேனியல், சல்மான் மிர்சா, சுபியான் முகீம்.

(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 08:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).