ஜூன் 28, சென்னை (Sports News): இந்தியா-தென் ஆப்பிரிக்கா (INDW Vs RSAW Test) பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி இன்று காலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Mint Leaves Benefits: புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நிதானமாக விளையாடினர். இவர்கள் இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தனர். மந்தனா 149 ரன்கள் அவுட் ஆனார்.
பின்னர், ஷபாலி மற்றும் ஜெமிமா கூட்டணி இணைந்து ரன்களை திரட்டினர். ஷபாலி 205 ரன்னிலும், ஜெமிமா 55 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து, கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வருகின்றனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 525 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறும்.
@TheShafaliVerma 2⃣0⃣5⃣ @mandhana_smriti 1⃣4⃣9⃣
Congratulations🎉🥳👏#INDW VS #RSAW #BCCI #ICC pic.twitter.com/ANKtv3q5ff
— नादान™ (@Roam_3112) June 28, 2024