West Indies Squad For WI Vs ENG: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது.

West Indies Squad For WI Vs ENG: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!
West Indies ODI Squad (Photo Credit: @BarbadosToday X)

அக்டோபர் 30, ஆன்டிகுவா (Sports News): இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் (WI Vs ENG) மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. முதல் ஒருநாள் போட்டி நாளை (அக்டோபர் 31) ஆன்டிகுவா (Antigua) மைதானத்தில் தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 02-ஆம் தேதி ஆன்டிகுவா மைதானத்திலும், 3வது ஒருநாள் போட்டி நவம்பர் 06-ஆம் தேதி பார்படாஸ் (Barbados) மைதானத்திலும் நடைபெற உள்ளது. INDW Vs NZW: நியூசிலாந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்.. தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி..?

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் (Shai Hope) தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், பிரண்டன் கிங், ரொமரியோ ஷெப்பர்ட், மேத்யூ போர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஜாரி ஜோசப், ஷர் ஜோசப், ஹெய்டன் வால்ஷ், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ் ஆகிய 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Oct 30, 2024 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).