DD Vs CSG: கேப்டன் அபராஜித் அரைசதம் விளாசல்.. திண்டுக்கல் அணி வெற்றிக்கு 181 ரன்கள் இலக்கு..!
2025 டிஎன்பிஎல், திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 14வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது.
ஜூன் 16, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 15) நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில், திருச்சி அணியை வீழ்த்தி திருப்பூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13வது லீக் போட்டியில், சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. DD Vs CSG Toss Update: திண்டுக்கல் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சேப்பாக்கின் வெற்றிப் பயணம் தொடருமா..?
திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Dindigul Dragons Vs Chepauk Super Gillies):
இந்நிலையில், இன்று (ஜூன் 16) திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (DD Vs CSG, Match 14) அணிகள் மோதுகின்றன. ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு தொடக்க வீரர்கள் கே ஆஷிக் மற்றும் மோகித் ஹரிஹரன் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அடுத்து வந்த ஜெகதீசன் 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சற்று அதிரடியாக தொடங்கிய விஜய் சங்கர் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
கேப்டன் அரைசதம் விளாசல்:
ஒருபுறம், நிதானமாக விளையாடி வந்த கேப்டன் பாபா அபராஜித் 38 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில், இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சுனில் கிருஷ்ணா 18 பந்தில் 32* ரன்கள் அடித்தார். இதன்மூலம், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது. திண்டுக்கல் அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
(The above story first appeared on LatestLY on Jun 16, 2025 09:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

