TGC Vs LKK: ராஜ்குமார் அதிரடி அரைசதம்.. கோவை வெற்றிக்கு 169 ரன்கள் இலக்கு..!

2025 டிஎன்பிஎல், திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதும் 15வது லீக் போட்டியில், திருச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்துள்ளது.

TGC Vs LKK: ராஜ்குமார் அதிரடி அரைசதம்.. கோவை வெற்றிக்கு 169 ரன்கள் இலக்கு..!
TGC Vs LKK 1st Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 17, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து, 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல், ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 16) நடைபெற்ற 14வது லீக் போட்டியில், திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. TGC Vs LKK Toss Update: கோவை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றிக் கணக்கை தொடங்க போவது யார்..?

திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் (Trichy Grand Cholas Vs Lyca Kovai Kings):

இந்நிலையில், இன்று (ஜூன் 17) திருச்சி கிராண்ட் சோழஸ் - லைகா கோவை கிங்ஸ் (TGC Vs LKK, Match 15) அணிகள் மோதுகின்றன. சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணி, ஷாருக்கான் தலைமையிலான கோவை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணிக்கு சுஜய் சிவசங்கரன் - வசீம் அகமது இணை நிதானமாக விளையாடினர். வசீம் அகமது 32 ரன்னிலும், சிவசங்கரன் 25 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கவுசிக் 5, ஜமால் 6 என அடுத்தடுத்து வெளியேறினர்.

ராஜ்குமார் அதிரடி அரைசதம்:

இதனையடுத்து, நிதானமாக விளையாடி வந்த சஞ்சய் யாதவ் 32 பந்துகளில் வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். இறுதியில், ராஜ்குமார் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 58* ரன்கள் அடித்தார். இதன்மூலம், திருச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்தது. கோவை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜாதவேத் சுப்ரமண்யன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

(The above story first appeared on LatestLY on Jun 17, 2025 09:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).