NRK Vs DD Toss Update: நெல்லை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. வெல்ல போவது யார்..?
2025 டிஎன்பிஎல், நெல்லை ராயல் கிங்ஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 24வது லீக் போட்டியில், நெல்லை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஜூன் 26, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. தற்போது, இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். நேற்று (ஜூன் 25) நடைபெற்ற 23வது லீக் போட்டியில், திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. NRK Vs DD: டிஎன்பிஎல் 24வது மேட்ச்.. நெல்லை - திண்டுக்கல் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
நெல்லை ராயல் கிங்ஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் (Nellai Royal Kings Vs Dindigul Dragons):
இந்நிலையில், இன்று (ஜூன் 26) நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் (NRK Vs DD, Match 24) அணிகள் மோதுகின்றன. அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், நெல்லை அணி 5 போட்டியிலும், திண்டுக்கல் அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில், நெல்லை அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
நெல்லை ராயல் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
அருண் கார்த்திக் (கேப்டன்), டி சந்தோஷ் குமார், என்எஸ் ஹரிஷ், ரித்திக் ஈஸ்வரன், பிஎஸ் நிர்மல் குமார், முகமது அத்னான் கான், சோனு யாதவ், சச்சின் ரதி, அதிஷ் எஸ்ஆர், இம்மானுவேல் செரியன், அஜய் கிருஷ்ணா.
திண்டுக்கல் டிராகன்ஸ் (பிளேயிங் லெவன்):
ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), சிவம் சிங், பாபா இந்திரஜித், தினேஷ் எச், விமல் குமார், மான் பாஃப்னா, எம் கார்த்திக் சரண், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், டிடி சந்திரசேகர், கணேசன் பெரியசாமி.
(The above story first appeared on LatestLY on Jun 26, 2025 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

