Rishabh Pant Birthday: நண்பனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்: மகிழ்ச்சியில் ரிஷப் பண்ட்..!

இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத மட்டைப்பந்து ஆட்டக்காரராக இருந்து வந்த ரிஷப், இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார். அவர் மீண்டும் அணியில் எப்போது இணைவார் என அவரின் நண்பர்களும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Rishabh Pant Birthday: நண்பனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்: மகிழ்ச்சியில் ரிஷப் பண்ட்..!
Rishabh Pant Birthday Celebration (Photo Credit: Twitter)

அக்டோபர் 04, புதுடெல்லி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீராக இருந்த ரிஷப் பண்ட் (Rishabh Pant), கடந்த டிசம்பர் 30, 2022 அன்று நள்ளிரவு நேரத்தில் ரூர்கேயில் இருந்து புதுடெல்லி நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார்.

டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில், நர்சன் பகுதியில் ரிஷப் கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி, கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது.

காருக்குள் சிக்கியிருந்த ரிஷப் பண்ட்டை, அவ்வழியே பயணித்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ரஜத் குமார், நிஷு குமார் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். Vivo V29 & V29 Pro in India: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Vivo V29 & V29 Pro ஸ்மார்ட்போன்: வாங்குவது எப்படி?.. விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

தற்போது, ரிஷப் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள தன்னை தொடர்ந்து தயார்படுத்தி வருகிறார். அவ்வப்போது, அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் விடீயோக்களும் வெளியாகி வைரலாகும்.

இந்நிலையில், இன்று ரிஷப் பண்ட்-க்கு பிறந்தநாள். அவர் தனது 27வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து, தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைத்து அவரின் பிறந்தநாள், நண்பர்களான ஷாவ், அக்சர் ஆகியோரால் சிறப்பிக்கப்பட்டது.

அவர் மீண்டும் அணியில் எப்போது இணைவார் என அவரின் நண்பர்களும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).