ZIM Vs NZ 1st Test, Day 2: நியூசிலாந்து அபாரம்.. ஜிம்பாப்வே 127 ரன்கள் பின்னிலை..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்களை இழந்து 31 ரன்கள் அடித்து, 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

ZIM Vs NZ 1st Test, Day 2: நியூசிலாந்து அபாரம்.. ஜிம்பாப்வே 127 ரன்கள் பின்னிலை..!
ZIM Vs NZ 1st Test, Day 2 (Photo Credit: @ZimCricketv X)

ஜூலை 31, புலவாயோ (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (ZIM Vs NZ) தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 30) புலவாயோவில் தொடங்கியது. காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதல் டெஸ்டில் இருந்து விலகினார். இந்நிலையில், கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ZIM Vs NZ 1st Test, Day 2: டெவோன் கான்வே அரைசதம் விளாசல்.. நியூசிலாந்து முன்னிலை..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக கிரேக் எர்வின் 39, தஃபட்ஸ்வா சிகா 30 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 6, நாதன் ஸ்மித் 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவோன் கான்வே இணை தொடக்கம் கொடுத்தது. வில் யங் 41 ரன்னில் அவவுட்டானார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 34, ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் நடையை கட்டினர். நிதானமாக விளையாடி வந்த டெவோன் கான்வே 88 ரன்கள் அடுத்து விக்கெட்டை இழந்தார். டேரில் மிட்செல் 80 ரன்கள் அடித்து அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 307 ரன்கள் அடித்தது.

ஜிம்பாப்வே பின்னிலை:

இதன்பின்னர், ஜிம்பாப்வே அணி 158 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் பிரையன் பென்னட் 18, பென் குர்ரான் 11 ரன்னில் நடையை கட்டினர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்களை இழந்து 31 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம், 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நிக் வெல்ச் 2*, வின்சென்ட் மசெகேசா 0* என களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):

பிரையன் பென்னட், பென் குர்ரான், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபட்ஸ்வா சிகா, நியூமன் நியாம்ஹுரி, வின்சென்ட் மசெகேசா, பிளெஸ்ஸிங் முசரபானி, தனகா சிவாங்கா.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டெவோன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, வில்லியம் ஓரூர்கே.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).