ZIM Vs NZ: முத்தரப்பு டி20 தொடர்.. ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்..!

முத்தரப்பு டி20 தொடரின் 6வது போட்டியில், ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் நாளை (ஜூலை 24) மோதுகின்றன.

Zimbabwe vs New Zealand 6th Match (Photo Credit: @K9winPK X)

ஜூலை 23, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். நடந்து முடிந்த 5 லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், ஜிம்பாப்வே அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், முதல் இரண்டு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிபோட்டியில் மோதவுள்ளன. அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். NZ Vs SA: டிம் சீஃபர்ட் அதிரடி ஆட்டம்.. தொடரில் ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

இந்நிலையில், நாளை (ஜூலை 24) நடைபெறும் 6வது லீக் போட்டியில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து (ZIM Vs NZ) அணிகள் மோதுகின்றன. சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணி வீரர்கள்:

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், வெஸ்லி மாதேவெரே, டியான் மியர்ஸ், ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டன்டா, தஃபட்ஸோ த்வாடென்சி, தஃபட்ஸுவாடென்சி வின்சென்ட் மசெகேசா.

நியூசிலாந்து அணி வீரர்கள்:

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), டிம் சீஃபர்ட், டெவோன் கான்வே, ராச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், ஆடம் மில்னே, மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷாம், வில்லியம் ஓரூர்க், மிட்செல் ஹே, டிம் ராபின்சன், ஜகாரி ஃபோல்க்ஸ்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement