2 Minor Boys Killed in a Car Accident: 14 வயதில் கார் ஓட்டும் பயிற்சி; 'கூடா நட்பு கேடாய் முடிந்த கதையாக' 2 சிறார்கள் உடல் நசுங்கி பரிதாப பலி..!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அடுத்துள்ள கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஒட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியாகினர்.

2 Minor Boys Killed in a Car Accident: 14 வயதில் கார் ஓட்டும் பயிற்சி; 'கூடா நட்பு கேடாய் முடிந்த கதையாக' 2 சிறார்கள் உடல் நசுங்கி பரிதாப பலி..!
Accident File Pic (Photo Credit: PTI)

ஜூன் 11, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அடுத்துள்ள கபிலர்மலை அடுத்த பெரிய மருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவரது மகன் சுதர்சனன் (வயது 14). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் லோகேஷ் (17) என்பவருடன் ஆம்னி வேன் ஓட்டி பழகி உள்ளார். அப்போது காரை பரமத்தி வேலூர் பைபாஸ் சாலையில் இருந்து கபிலர்மலை நோக்கி சுதர்சன் ஓட்டி பழகிக் கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் எதிரே ஈரோடு நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது நேருக்கு நேர் அதி வேகமாக மோதி விபத்தில் சிக்கியது. Elon Musk Threatens To Ban iPhone: ஐபோன்களுக்கு தடை.. எலான் மஸ்கின் மிரட்டல் பதிவு..!

இதில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் உள்ள இருந்த சிறுவர்கள் சமூகத்தின் மீது உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இத் தகவல் அறிந்த ஜேடர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களுக்கு வாகனம் ஓட்டகொடுத்தது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).